தகுதி இல்லாதவர்களை நியமிக்க வேண்டாம்!
இந்தியர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண அன்வார் தலைமையில் குழுவை அமையுங்கள்

மலேசியா இந்தியர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் குழு அமைக்கப்பட வேண்டும்

இந்த குழுவில் இந்திய எம்பிக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் இடம் பெற வேண்டும்.

மேலும் இந்திய சமுதாயத்திற்கு போராடும் அரசு சார்பற்ற அமைப்புக்கள் இடம் பெறுவது முக்கியம்.

இதை விடுத்து தகுதி இல்லாதவர்களை இந்தியர் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கக்கூடாது என்று பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி தெரிவித்தார்.

துணை பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி வெறுமனே ஒருவரை இந்தியர் பிரிவு அதிகாரியாக நியமிக்க முடியாது.

கடந்த 60 ஆண்டுகளாக தேசிய முன்னணி ஆட்சியில் இந்திய சமுதாயம் நசுக்கப்பட்டது.

ஆகவே இந்திய சமுதாயத்தின் மீது பொறுப்புள்ளவர்களை சிறப்பு அதிகாரியாக நியமிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

டத்தோ ரமேஷ் ராவ் இந்தியர் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்படுவார் என்று டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி நேற்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles