வெற்றி பெற்ற நெகிரி மாநில தமிழ்ப்பள்ளி ஹாக்கி குழுக்களை பாராட்டி கௌரவித்தார் மாண்புமிகு வீரப்பன்!

சிரம்பான், மார்ச் 28-
சிரம்பான் நகரில் உள்ள உள்ள கிளானா ரிசார்ட்டில் நடைபெற்ற 2025 SJK நெகிரி செம்பிலான் ஹாக்கி போட்டிக்கான பாராட்டு விழாுக்கு நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வீரப்பன் சுப்ரமணியம் தலைமை ஏற்றார்.

இந்த விழாவிற்கான முழுச் செலவும் RM15,000 முன்பு உறுதியளித்தபடி அவருடைய தனிப்பட்ட பங்களிப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

SJK தேசிய அளவிலான ஹாக்கி சாம்பியன்ஷிப்பில் (ஆண்கள் மற்றும் பெண்கள்) வெற்றி பெற்றதற்காக நெகிரி செம்பிலான் SJKT ஹாக்கி அணிக்கு வாழ்த்துக்களை அவர் தெரிவித்துக் கொண்டார்.

மகளிர் ஹாக்கி அணி சாம்பியன் ஆனது. ஆண்கள் அணி 2 மற்றும் 6 ஆவது இடத்தைப் பிடித்தது. மேலும், SJKT கோலப்பிலா தமிழ் பள்ளி இணைந்து இந்த நிகழ்வின் முக்கிய ஏற்பாட்டாளர் ஆவார். இதில் 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் கோலப்பிலா மாவட்ட கல்வி அதிகாரி துவான் ஹாஜி கமனிஷம் பின் ஹாஜி டின்டேக், போட்டி மேலாளர் திரு. டொமினிங் சவரிமுத்து, ஆசிரியர்கள் மற்றும் ஹாக்கி பயிற்சியாளர்கள், மாணவர்கள் மற்றும் விருந்தினர்கள் இந்த விழாவில் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles