அழகான வார்த்தைகளை பேசி
ஒற்றுமை உணர்வை
பேணி காப்போம்

பல இனங்கள் மற்றும் பல கலாச்சாரங்கள் கொண்ட நாட்டில் நாம் மக்களிடையே அழகான வார்த்தைகளைப் பேசி நட்புறவை வலுப்படுத்துவது நமது வழக்கம் மற்றும் கடமையாகும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ சமுதாயத்திற்கு இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

கிறிஸ்துமஸ் தினம் என்பது கிறிஸ்தவர்களுக்கு ஒரு முக்கிய நாள்.

அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் அதை குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகிறார்கள், ”என்று அவர் தனது முகநூலில் தெரிவித்தார்.

இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மிகவும் விமரிசையாக கொண்டாடப் படுவதோடு மக்களிடையே அமைதி, நல்லிணக்கம், செழிப்பு மற்றும் ஒற்றுமையைக் கொண்டு வரும் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles