தாமான் மஸ்னா சூராவ் கைரியா தீ விபத்தில் பாதிக்கப்படவில்லை

கிள்ளான் தாமான் மஸ்னாவில் அமைந்துள்ள சூராவ் கைரியா தீ விபத்தில் பாதிக்கப்படவில்லை.

செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் இதனை உறுதிப்படுத்தினார்.

தாமான் மஸ்னாவில் இன்று காலை 5 மணியளவில் தீ விபத்து நிகழ்ந்தது.

இந்த தீ விபத்தில் சூராவ் கைரியா சேதமடைந்தது. குறிப்பாக தீயில் அழிந்து விட்டது என தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இதன்  அடிப்படையில் பாதிக்கப்பட்ட சூராவை பார்வையிட இங்கு வந்தேன்.

உண்மையில் தீ விபத்து சூராவ்க்கு அருகில் உள்ள   வீட்டில் நிகழ்ந்தது. அந்த வீடு தான் தீ விபத்தில் சேதமடைந்தது.

இவ்விபத்தில் சூராவ் கைரியாக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை.

ஆகையால் சூராவ் குறித்து யாரும் தவறான தகவலை யாரும் பரப்ப வேண்டாம் என்று குணராஜ் கேட்டு கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles