தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய ஸ்ரீ மகா காளியம்மன் ஆலய நிர்வாகத்தை பாராட்டுகிறேன்! அமைச்சர் கோபிந்த் சிங் டியோ

பூச்சோங், ஏப 4-
புத்ரா ஹைட்ஸ்சில் ஏற்பட்ட எரிவாயு குழாய் தீ சம்பவத்தில்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய ஸ்ரீ மகா காளியம்மன் ஆலய நிர்வாகத்தை பெரிதும் பாராட்டுகிறேன் என்று டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

புத்ரா ஹைட்ஸில் நிகழ்ந்த எரிவாயு குழாய் தீ விபத்து மிகப் பெரிய சேதத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் சம்பவம் நடந்த முதல் நாளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில் இடம் வழங்கியதுடன் அவர்களுக்கு உரிய உதவிகளை ஆலய நிர்வாகம் வழங்கி உள்ளது.

இதுநாள் வரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு தண்ணீர் உட்பட பல பொருட்களை ஆலய நிர்வாகம் வழங்கி வருவதை நான் அறிவேன்.

மேலும் தீ விபத்தில் சிக்கிய நாய், பூனை போன்ற பிராணிகளுக்கும் இந்த ஆலயத்தில் தான் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இது ஆலய நிர்வாகத்தின் மனிதநேயத்தை காட்டுகிறது என்று அவர் சொன்னார்.

தீ சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை இன்று நேரில் சந்தித்து அமைச்சர் கோபிந்த் சிங் டியோ ஆறுதல் கூறினார்.
. கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் உட்பட பலரும் அப்போது உடன் இருந்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles