

பூச்சோங் ஏப 4-
புத்ரா ஹைட்ஸில் எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு டிஜிட்டல் அமைச்சு மூலம் மடிக்கணினிகள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகள் தலா 100 யூனிட்களை வழங்கப்படும் என்று டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவரின் பல சாதனங்கள் தீயில் சேதமடைந்ததால், தனது அமைச்சு 500 பவர் பேங்க்களையும் விநியோகிக்கும் என்றார்.
பாதிக்கப்பட்டவர்கள் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் அலுவலகம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றார் அவர்.
.
MyDigital கார்ப்பரேஷன், சிலாங்கூர் மந்திரி பெசார் பெசார் அலுவலகம், சிலாங்கூர் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் கார்ப்பரேஷன் ஆகியவற்றுடன் இணைந்து தற்போதைய நிலைமை குறித்த சமீபத்திய தகவல்களை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க ஆன்லைன் தளத்தை வழங்கும் என்று அவர் சொன்னார்.
எரிவாயு குழாய் தீ சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை இன்று நேரில் சென்று அமைச்சர் கோபிந்த் சிங் டியோ சந்தித்து பேசினார்.
மேலும் தற்போதைய நிலவரங்களையும் அவர் கேட்டறிந்தார்.

