

7 கண்டங்களாக பிரிந்துகிடக்கும் இந்த நிலப்பரப்பை எப்போதும் முத்தமிட்டுக் கொண்டிருப்பது கடல் அலைகள்தான்.
ஓய்வில்லாத இந்த அலைகளின் ஓசையை நித்தமும் கேட்டு மகிழ்வதுதான் கடலோர மீனவ மக்களின் ஆசை.
ஒவ்வொரு நாள் இரவிலும் அவர்களை தாலாட்டு இசை பாடி தூங்க வைப்பதே இந்த அலைகள்தான்.
அழகு என்றும் ஆபத்து என்று சொல்வார்களே, அதுபோல இந்த அழகான அலைகளும் ஆபத்தை ஏற்படுத்திய ஆண்டு 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி.
இந்தோனேசியா சுமத்ரா தீவு கடல் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், சுனாமி என்னும் ஆழிப்பேரலை 30 மீட்டர் உயரத்துக்கு கடலில் எழுந்து இந்தியா, இந்தோனேசியா, இலங்கை, மாலத்தீவு, தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட 14 நாடுகளை தாக்கியது.
2 லட்சத்து 29 ஆயிரத்து 866 பேர் இறந்து போனார்கள்.
இன்று 18 ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தையொட்டி சுனாமி பேரலையில் இறந்த நபரின் குடும்பத்தினர்கள், உறவினர்கள் கடற்கரையில் உயிரிழந்தவர்களை நினைத்து கண்ணீர் விட்டு அழுதபடி கடல் அலைகளை பார்த்து கும்பிட்டனர்.

