ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் பெண் சக்தி பிரிவின் மூலம் இந்தியப் பெண்களின் தலைமைத்துவ ஆற்றலை மேம்படுத்தப்படும்! புகனேஸ்வரி அறிவிப்பு

காளிதாஸ் சுப்ரமணியம்

பெட்டாலிங் ஜெயா, ஏப் 6-
இந்தியப் பெண்களின் தலைமைத்துவ ஆற்றலை மேம்படுத்தும் திட்டங்கள் தொடர்ந்து மேற் கொள்ளப்படும் என்று
ஸ்ரீ முருகன் கல்வி நிலைய பெண் சக்தி பிரிவின் தலைவர் புகனேஸ்வரி தெரிவித்தார்.

இந்தியப் பெண்களும் தலைமைத்துவ பொறுப்புகள் ஏற்க வேண்டும் என்பது எங்களின் இலக்கு.

இதன் அடிப்படையில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தில் பெண்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தற்போது ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தில் பெண் சக்தி எனும் தனிப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.

இந்தப் பெண் சக்தியின் கீழ் சிறப்பு பட்டறை ஒன்று நடத்தப்பட்டது.

இந்தியப் பெண்கள் மன ரீதியி்ல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். குறிப்பாக வலுவாக இருக்க வேண்டும் என்பதே இப்பட்டறையின் முதன்மை இலக்காகும் என்று அவர் சொன்னார்.

சிங்கப்பூரின் கிரியாட் எனும் இயக்கத்துடன் இணைந்து இப்பட்டறை நடத்தப்பட்டது.

சிறப்பு பேச்சாளராக பாரதி மனோகரன் கலந்து கொண்டு பெண்களுக்கு பயனுள்ள பல கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.

அதே வேளையில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் இணை இயக்குநர் சுரேந்திரன் இப்பட்டறையை நிறைவு செய்து வைத்தார்.

சமுதாயத்தில் இந்தியப் பெண்கள் வலுவான நிலையிலும் தலைமைத்துவ பொறுப்புகளை ஏற்கவும் தயாராக இருக்க வேண்டும்.
இதையே ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் ஊக்குவித்து வருகிறது.

இதன் அடிப்படையில் பெண் சக்தி பிரிவு அடுத்தடுத்து பெண்களின் மேம்பாட்டிற்காக பல திட்டங்களை முன்னெடுக்கும்.
இத் திட்டங்கள் இந்தியப் பெண்கள் கலந்து பயன்பெற வேண்டும் என்று புகனேஸ்வரி கேட்டுக்கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles