பினாங்கு இந்து அறப்பணி வாரியத்துக்கு (PHEB ) தமிழர்களே தலைமையேற்க வேண்டும் கணேசன் பகாங் உரிமை கோரிக்கை

கோலாலம்பூர் ஏப்ரல் 6-
அண்மையில் 2025 – ஆம் ஆண்டு பினாங்கு இந்து அறப்பணி வாரிய (PHEB ) தலைமை பொறுப்பு தொடர்பாக கருத்து விவாதங்கள் தொடங்கிவிட்டது.

நடப்பு தலைவர் RSN ராயரின் பதவிக்காலம் ஜூலை மாதம் முடிகிறது,

புதிய தலைவராக
வருவதற்கு ஒரு சிலர் மிகுந்த ஆர்வமாக உள்ளார் என்ற செய்தி சூடு பிடிக்க தொடங்கி விட்ட அதே நேரத்தில்
சிக்கலையும் சேர்த்து உண்டாக்கி வருகிறது.

பினாங்கு இந்து அறப்பணி வாரிய சட்டப்படி தலைமை பதவிக்கு எந்த ஒரு மதமும் இனமும் தடை இல்லை என்றாலும் மலேசியாவில் மூன்றாவது பெரிய இனமாகவும்,
உலகின் மூத்த இனமாகவும்,
உலகின் உயர்த் தனி செம்மொழியான தமிழ் மொழிக்கு சொந்தக்காரர்களாகவும், பண்டைய நாகரிகம், பண்பாடு, சமயம், மற்றும் வரலாற்றை தன்னகத்தே கொண்ட இனமாக திகழும் தமிழர்களே அப்பதவிக்கு தலைமையேற்க வேண்டும்.

பினாங்கு மாநில முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி இந்து அறப்பணி வாரியத்துக்கு தலைவராக இருந்து நிர்வாகத்தை மிக சிறப்பாக வழிநடத்தி வந்தார் என்பது அனைவரும் அறிந்ததே.

இன்றைய மலேசிய அரசியல் நடைமுறையில் தமிழினம் தலைமைத்துவம் இன்றி தள்ளாடிக் கொண்டு இருக்கிறது என்பதை நாடே அறியும்.

மூன்றாவது பெரும்பான்மை இனமான தமிழர்களுக்கு ஒரு தமிழ் பேசும் முழு அமைச்சரைக் கூட வழங்கப் பட வில்லை என்பதே தமிழர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தையும்,
ஆதங்கத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

பொருளாதார, சமூக, அரசியல் துறைகளில் தீர்மானங்களை
எடுக்கும் இடத்தில் தமிழர்கள் வேண்டுமென்றே, இயல்பாகவோ புறக்கனிக்கப் படுகின்றனர்.

தேசிய நீரோட்டத்தில் இருந்து தமிழ் சமூகம் ஓரங்கட்டப்பட்டு ஒதுக்கப்படுகின்றனர் என்ற நடைமுறை உண்மையை மலேசிய தமிழர்கள் உணர தொடங்கி விட்டார்கள்.

இனி வரும் காலங்களில் அரசியல் மாற்றங்கள் காரணமாக தமிழினம் இன்னும் எத்தகைய சிக்கல்களை எதிர்கொள்ள போகிறார்கள் என்பதே ஒரு பெரிய கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் , மலேசிய இந்திய சமூகத்தை பிரதிநிதிக்கு முக்கிய அமைப்புகளில் தமிழர்களே தலைமை தாங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மலேசிய தமிழ் சமூகம் ஒற்றுமையாக இருந்து அரசியல் ஆழுமை பெற எல்லா வழியிலும் உழைக்க வேண்டும். அதுவே தமிழர்களின்
இறையாண்மையை பாதுகாக்க ஒரு அரணாக அமையும் என்று பகாங் மாநில உரிமை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கணேசன் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles