பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவராக தமிழரை நியமியுங்கள்!

கோலாலம்பூர் ஏப்ரல் 6-
பினாங்கு இந்து அறவாரியத்தின் தலைவராக தமிழரை நியமியுங்கள் என உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் மற்றும் மலேசிய தமிழ்ச்சமயப் பேரவை சார்பில் திரு.பாலமுருகன் வீராசாமி திரு.ஆனந்த தமிழன் முனியாண்டி ஆகியோர் தமது கூட்டறிக்கையில் தெரிவித்துக் கொண்டனர்.

தற்போது மலேசிய அரசியல் வரலாற்றில் படிப்படியாக தமது உரிமையும் நிகராளித்துவத்தையும் இழந்து வரும் தமிழர்கள் மத்தியில் இந்த பதவிக்கு மற்றவர்கள் நியமனம் செய்யப்பட்டால் அது ஒரு இழப்பாகவே பார்க்கப்படும் .

அந்தந்த சமயத்தை ஏற்றுக் கொண்டவர்கள்தான் அவரவர் சமய அமைப்பு, குழுவுக்கு தலைவராக அல்லது நிகராளியாக இருக்க வேண்டும் என்பதே இயல்பு.

மாறாக மற்றவரை கொண்டு வந்து நிறுத்துவது அந்த சமயத்தின் இயலாமையை காட்டுவதாகும்.

மேலும் இது தங்கள் சமூகத்தின் தன்னம்பிக்கையை கேள்விக்குறியாக்கி விடும்.

ஆகவே இது நிகழாமல் இருக்கவும் தங்களது தன்மானத்தை காக்கவும் பெரும்பான்மை இனத்தின் மகனான ஒரு தமிழரை நியமிக்க வேண்டும் என உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் மற்றும் மலேசிய தமிழ்ச்சமயப் பேரவை சார்பில் திரு.பாலமுருகன் வீராசாமி திரு.ஆனந்த தமிழன் முனியாண்டி ஆகியோர் வலியுறுத்தினர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles