
கோலாலம்பூர், ஏப். 7 – சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸில் எரிவாயு குழாய் தீ விபத்து நடந்த இடத்தில் ஏற்பட்ட பள்ளத்தில் தேங்கிய மழைநீரை வெளியேற்றுவதில் பாதிக்கப்பட்ட பகுதிக்கான மேலாண்மைப் பணியின் ஆறாவது நாளான இன்று கவனம் செலுத்தப்படுகிறது.
பாதுகாப்பு மதிப்பீடுகளை மீண்டும் தொடங்குவதற்கு இந்தப் பணி மிகவும் முக்கியமானது என்று சுபாங் ஜெயா காவல்துறைத் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மாமட் கூறினார்.
இன்று காலை எங்கள் கவனம் முழுவதும் பள்ளத்தின் மீது உள்ளது. ஏனெனில் பாதுகாப்பு மதிப்பீடுகளைத் தொடர்வதற்கு முன்பு அதில் தேங்கியுள்ள அதிகளவிலான தண்ணீரை வெளியேற்ற வேண்டும் என்று அவர் பெர்னாமாவிடம் கூறினார் .

