
கோலகுபு பாரு, ஏப்.7-
ஹார்லி டேவிட்சன் ரக மோட்டார் சைக்கிள் குழுவான ஷெடோபெக் குழுவினர் அண்மையில் கோலகுபு பாருக்கு மோட்டார் சைக்கிளில் அணி வகுத்து சென்றனர்.
அங்குள்ள இயற்க்கை சூழலை காண இவர்கள் இந்த அணி வகுப்பை மேற்கொண்டனர். 22 பேர் மோட்டார் சைக்கிளில் அங்கு பயணித்ததுடன் அங்குள்ள இயற்க்கை சூழலை கண்டு மகிழ்ந்ததாக ஷெடேபெக் மோட்டார் சைக்கிள் குழுவினர் நோற்றுநர் டத்தோ ஆனந்த் தெரிவித்தார்.

பொதுவாக இந்த குழுவினர் நாடு விட்டு நாடு மோட்டார் சைக்கிளில் அணிவகுத்து செல்வது வழக்கம். இம்முறை நேர சூழ்நிலை காரணமாக அவர் குறுகிய பயணத்தை மேற்கொண்டதாக அவர் சொன்னார்.
மோட்டார் சைக்கிள் பயணித்தில் ஆர்வமுள்ள இந்திய இளைஞர்கள் இதுபோன்ற பதிவுப்பெற்ற மோட்டார் சைக்கிள் குழுவில் இணைந்து கொண்டு மோட்டார் சைக்கிள் பயணத்தை மேற்கொள்வது சிறப்பாகும்.

இதுபோன்ற குழுவில் சேர்வதால் அவர்கள் முறையான மோட்டார் சைக்கிள் பயணத்தை மேற்கொள்வதுடன் பாதுகாப்பாகவும் இருக்கலாம். மேலும் அவர்கள் தீய வழிக்கு செல்லாமல் நல்ல வழியில் வாழ்க்கையில் பயணிக்க இது ஏதுவாக அமையும் என டத்தோ ஆனந்த் கூறினார்.
பல நாடுகளுக்கு பயணித்துள்ள இக்குழுவினர் தொடர்ந்து வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

