

கோலாலம்பூர் ஏப்ரல் 7-
நாடு தழுவிய அளவில் ம இகா கிளைக் கூட்டங்கள் இப்போது நடைபெற தொடங்கி விட்டது.
அந்த வகையில் விலாயா மாநிலத்தில் உள்ள தித்தி வங்சா நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட PERTIWI CONDO ம இகா கிளைக் கூட்டம் கடந்த சனிக்கிழமை மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
தித்தி வங்சா தொகுதி தலைவர் அரசு, உதவித் தலைவர் வேணுகோபால் ஆகியோர் உட்பட PERTIWI CONDO கிளை உறுப்பினர்கள் பெரும் அளவில் கூட்டத்தில் கலந்து சிறப்பித்தனர்.
ம இகா தலைமையகத்தின் சார்பில் டேவிட் இந்த கிளைக் கூட்டத்தை முறையாக நடத்தி வைத்தார்.
PERTIWI CONDO மஇகா கிளைத் தலைவர் ராஜா காளிமுத்து தமது உரையில் தித்தி வங்சா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ஜோஹாரியுடன் இணைந்து தித்தி வங்சா ம இகா தலைவர்கள் மிகவும் சிறப்பாக இயங்கி வருவது பாராட்டுக்குரியது என்றார்.
ம இகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன், விலாயா மாநில தலைவர் மற்றும் தித்தி வங்சா தொகுதி தலைவருக்கும் பக்கப் பலமாக இருப்போம் என்று தெரிவித்தார்.

