கெஅடிலான் தேர்தல்: உலு லங்காட் தொகுதியின் தலைவர் பதவியை தற்காத்துக் கொள்கிறார் இராஜன் முனுசாமி!

செமினி, ஏப்ரல் 7-
2025 – 2028 தவணைக்கான கெஅடிலான் கட்சியின் தொகுதி தலைவர்களுக்கான தேர்தல் 2025 ஏப்ரல் மாதம் நடைபெறவிருக்கிறது.

அதே வேளையில், சிலாங்கூர் மாநில தொகுதி தலைவர்களுக்கான தேர்தல் ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெறும்.

அவ்வகையில் கெஅடிலான் தொகுதி தலைவர்களுக்கான தேர்தலில் இராஜன் முனுசாமி தனது உலு லங்காட் தொகுதி தலைவர் பதவியை தற்காத்துக் கொள்வதற்காகப் போட்டியிடுகிறார்.

கடந்த 2007 ஆம் ஆண்டு அரசியலில் காலடி வைத்த இராஜன் முனுசாமி இத்தொகுதி மக்களுக்காக பல்வேறு அளப்பரிய சேவைகளை ஆற்றி வருகிறார் .

அவர் வகித்த கட்சி பதவிகள் & அவரின் அனுபவங்கள்:

2025கெஅடிலான் உலு லங்காட் தொகுதி தலைவர்

  • (தொகுதி தலைவர் : 2020 – 2025)
  • சிலாங்கூர் மாநில கெஅடிலான் தலைமைத்துவ மன்ற ஆட்சிக்குழு உறுப்பினர் : 2020 – 2025)
  • ( தொகுதி துணைத் தலைவர்: 2018 – 2020)
  • (கெஅடிலான் உலு லங்காட் இளைஞர் பிரிவு உதவி தலைவர்: 2009 – 2018)
  • (கெஅடிலான் சிலாங்கூர் இளைஞர் பிரிவு பொருளாளர் : ஆட்சிக் குழு உறுப்பினர் 2014 – 2016)

தனது அரசியல் பயணத்தில் தலைவர்களோடு இணைந்து மத்திய மற்றும் மாநில அரசாங்கத்தின் உதவிகள் மக்களுக்கு எளிதாக கிடைப்பதற்கு உதவியுள்ளார்.

மக்களின் பல்வேறு பிரச்சினைகளையும் இவர்
வெற்றிகரமாகத் தீர்த்து வைத்துள்ளார்.
அவற்றுள் பின் வருமாறு :

இளைஞர் மேம்மாட்டு திட்டங்களை அமல்படுத்தியது
மகளிர் மேம்பாட்டு திட்டங்களை அமல்படுத்தியது

*சுகாதாரம், சமூக நலன் மற்றும் மருத்துவ திட்டங்களை அமல்படுத்தியது.

ஆலய நிலத்தை அரசு பதிவேட்டில் இடம் பெறச் செய்யும் விவகாரத்திற்குத் தீர்வு கண்டது.

தோட்டப் பாட்டாளிகளின் வீட்டுப் பிரச்னைக்குத் தீர்வு கண்டது
வெள்ளம், அடிப்படை வசதி, வீடுகளில் தீ விபத்து உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு வெற்றி கரமாகத் தீர்வு கண்டது

மித்ரா சமூக பொருளாதார மேம்பாட்டு திட்டங்களை அமல்படுத்தியது

காஜாங் நகராண்மைக் கழக ரீதியில் இஸ்லாமியர் அல்லாத வழிபாட்டு தலங்களுக்கான செயற்குழுவை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டது

புரோகாவில் மின் சுடலை அமைப்பதற்கு அரசு அனுமதி பெற முயற்சி மேற்கொண்டது

மக்கள் நலன் மீது இவர் காட்டி வரும் அக்கறை காரணமாக ஒவ்வொரு முறை நடைபெறும் கட்சி தேர்தலின்போதும் இவருக்கு ஆதரவு பெருகி வருகிறது.

இதன் அடிப்படையில் உலு லங்காட் தொகுதி மக்களுக்கு (செமினி & டுசுன் துவா) மக்களுக்குத் தான் தொடர்ந்து சேவையாற்றுவதற்கு ஏதுவாக இம்முறை தனக்கு உறுப்பினர்கள் பேராதரவு வழங்கி தன்னை வெற்றி பெறச் செய்வார்கள் என இராஜன் முனுசாமி பெரிதும் எதிர்பார்க்கிறார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles