பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மாதந்திர வாடகை கட்டணமாக 2,000 ரிங்கிட் வழங்கப்படும்!

ஷா அலாம், ஏப் 8 – அண்மையில் புத்ரா ஹைட்சில் எரிவாயு குழாயில் நிகழ்ந்த தீ விபத்து பேரிடரில் அருகில் உள்ள பாதிக்கப்பட்ட குடியிருப்பு வாசிகளில் 513 பேரின் வீடுகள் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு முழு வாடகை செலவுகளுக்கான 7.2 மில்லியன் ரிங்கிட்டை சிலாங்கூர் அரசு ஏற்றுக்கொள்ளும் என மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஒவ்வொரு வீட்டிற்கும் மாதந்திர வாடகை கட்டணமாக 2,000 ரிங்கிட்டை சுமார் ஆறு மாதத்திற்கு செலுத்தப்படும்.

613 குடும்பத்தினர் ஆறு மாதம் காலம் வாடகை வீட்டில் தங்கியிருப்பதற்கான வாடகை கட்டணத்தை ஏற்றுக்கொள்வது என மாநில அரசாங்கம் முடிவு செய்திருப்பதாகவும் ஒவ்வொரு வீட்டிற்கும் 2,000 ரிங்கிட் வாடகை கட்டணம் வழங்கப்படும் என மாநில அரசாங்க செயலாளரின் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அமிருடின் ஷாரி கூறினார்.

பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள் மறுசீரமைக்கப்படும் வரை அதற்கான மொத்த செலவுத் தொகையான 7.2 மில்லியன் ரிங்கிட்டை மாநில அரசாங்கம் செலுத்தும்.

இதனிடையே குடியிருப்புகள் மற்றும் இதர கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட சேதம், பழுது மற்றும் மின் வயரிங் செலவு உட்பட 5.4 மில்லியன் ரிங்கிட் செலவாகும் என தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் மதிப்பிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles