
பினாங்கு, ஏப்ரல் 8-
கடந்த பிப்ரவரி 18, 2025 அன்று காலை, சுங்கை பக்காவில் ஒரு துயர விபத்து நிகழ்ந்தது.அது கண் இமைக்கும் நேரத்தில் இரண்டு சிறிய உடன்பிறப்புகளின் வாழ்க்கையை மாற்றியது.
அவர்கள் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த போது இந்த துயர சம்பவம் நடந்தது.தர்ஷன் முருகன் (வயது 7) தனது இடது கையில் – பலத்த காயம் ஏற்பட்டது, இதனால் அனைத்து தசைகளையும் இழந்தார்.

அவரது தங்கை, கவர்ஜிதா முருகன், 5 வயது மட்டுமே. தனது வலது காலை முழங்காலுக்குக் கீழே இழந்தார்.அந்தக் காயம் அவ்வளவு சின்னக் குழந்தைக்குப் பெரிதாக இருந்தது.
விபத்து நடந்த முதல் நாளிலிருந்தே, இந்தக் குடும்பத்துடன் இருப்பதற்கான பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டேன்.
அவர்கள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படும் வரை நான் அவர்களுக்குப் பக்கபலமாக இருந்தேன்.
இருப்பினும், அவர்களின் சோதனைகள் அங்கு முடிவடையவில்லை. கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக, இந்த இரண்டு உடன் பிறப்புகளும் இன்னும் குணமடையாத காயங்களால் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை.
நான் எப்போதும் அவர்களுடன் தொடர்பில் இருப்பேன், அவர்கள் எப்படி இருக்கிறார்கள், எப்படிப் போகிறார்கள் என்று கேட்பேன்.

சமீபத்தில், நான் கேட்டேன், “அவங்க பள்ளிக்கு போகத் தவறிட்டாங்களா?”
அவர்களது பதில் என் மனதை வேதனைப்படுத்தியது! அவர்கள் படிப்பில் பின்தங்கிவிடுவார்கள் என்று நாங்கள் கவலைப்படுகிறோம் என்று குடும்பத்தினர் தெரிவித்தனர்.
உடனடியாக நான் ஒரு ஆசிரியரை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினேன். இந்த ஆசிரியர் வாரத்திற்கு 3 முறை வந்து, ஒவ்வொரு முறையும் 1.5 மணிநேரம் பாடம் கற்பிப்பார்.
முதல் 6 மாதங்களுக்கான அவர்களின் கல்விக் கட்டணத்தை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்.இன்று இந்த இரண்டு உடன் பிறப்புகளின் மகிழ்ச்சியான முகங்களை வார்த்தைகளால் வெளிப்படுத்துவது மிகவும் கடினம்.
பெரிய சோதனைகளை எதிர் கொண்டபோதும் கூட அவர்களிடம் கற்றலில் நம்பமுடியாத ஆர்வம் இருந்தை எண்ணி வியந்து போனேன் என்று செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.