வீட்டின் மாத தவணை பணத்தை செலுத்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு கால அவகாசம் வழங்குக! சிலாங்கூர் பிபிபி கட்சியின் தலைவர் டாக்டர் சுரேந்திரன் வேண்டுகோள்

பூச்சோங் ஏப் 8-
நாட்டை உலுக்கிய புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் தீ சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் துயரத்தில் இருந்து மீளவில்லை.

கடுமையாக பாதிக்கப்பட்ட வீடுகள் பழுது பார்க்க நீண்ட காலம் பிடிக்கலாம். புத்ரா ஹைட்ஸ்சில் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர்கள் வீட்டிற்காக வங்கியில் கடன் பெற்றிருக்கலாம்.

இந்த துயரமான காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர்கள் மாத தவணை பணத்தை செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் டாக்டர் சுரேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு அவர்களுக்கு சிலாங்கூர் மாநில பிபிபி உதவிக் கரம் நீட்டியுள்ளது.

பரிவுமிக்க மலேசியர்கள் இனம் நிறம் பாராமல் உதவிக்கரம் நீட்டுவதை பெரிதும் வரவேற்கிறோம். அதேசமயம் பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர்களுக்கு வங்கிகள் கருணை காட்ட வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இதுபோன்ற பேரிடர் மீண்டும் நிகழாமல் இருக்க அரசாங்கம் மற்றும் மாநில அரசாங்கம் முழு விழிப்புடன் இருக்க வேண்டும் என்றார்.

இதை ஒரு துயரமான பேரிடர் என்று வர்ணித்த டாக்டர் சுரேந்திரன் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப நாம் அனைவரும் பக்கப்பலமாக இருப்போம் என்று கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles