
தாப்பா, ஏப்ரல் 8-
பேராக் மாநில ஆயிர் கூனிங் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் பிஎஸ்எம் கட்சியின் சார்பில் பவானி போட்டியிடுகிறார் என்று பிஎஸ்எம் கட்சியின் தலைவர் டாக்டர் மைக்கல் ஜெயக்குமார் தேவராஜ் தெரிவித்தார்.
ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தல் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பிஎஸ்எம் கட்சியின் சார்பில் பவானி போட்டியிடவுள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலில் அந்த தொகுதியில் ஐந்து முனைப் போட்டியில் பவானி போட்டியிட்டார். அதன் அடிப்படையில் அவர் இரண்டாவது முறையாக அத்தொகுதியில் போட்டியிடவுள்ளார் என்று அவர் சொன்னார்.

