
ஆளில்லாத வளாகங்களால் ஏற்படும் டிங்கி காய்ச்சல் பரவுவதைத் தடுக்க பேராக் மாநில அரசு சட்டப்பூர்வ வழிகளைப் பயன்படுத்தும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
நோய் பரப்பும் பூச்சிகளை அழிக்கும் சட்டம் 1975 இன் பிரிவு 8 இன் மூலம் இது செயல்படுத்தப்பட்டுவதாக மாநில சுகாதாரம், மனித வளங்கள், இந்திய சமூக விவகாரங்கள் மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு நிர்வாக அதிகாரி ஏ. சிவனேசன் தெரிவித்தார்.
பேராக்கில் டிங்கு பரவுவதற்கு காரணமான காலி நிலங்கள் மற்றும் வளாகங்களின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்று அவர் கூறினார்.
வீட்டு வளாகங்களை சுத்தம் செய்யாமல் இருந்து வரும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை முன் அந்த வளாகங்களை சுத்தம் செய்யும் மாறு அதன் உரிமையாளர்களிடம் கேட்டுக்கொள்ளப்படும் , ஐந்து முதல் ஏழு நாட்களுக்குள் சுத்தம் செய்யப்பட வேண்டும்.
“குறிப்பிட்ட காலத்திற்குள் அவ்வாறு செய்யத் தவறினால், உரிமையாளர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார்” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இன்றுவஇங்குள்ள பேராக் தாருல் ரிட்சுவான் கட்டிடத்தில் நடைபெற்ற பேராக் மாநில டிங்கி குழு கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பின்னர் அவர் இவ்வாறு கூறினார்.
அறிவிப்பு வெளியிடப்பட்ட ஐந்து முதல் ஏழு நாட்களுக்குள் வளாகத்தை சுத்தம் செய்யத் தவறும் உரிமையாளர்களுக்கு முதல் முறை குற்றத்திற்காக அதிகபட்சமாக 10,000 ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
மீண்டும் மீண்டும் குற்றங்களைச் செய்தால், அதிகபட்சமாக 50,000 ரிங்கிட் வரை அபராதம் அல்லது ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், காலியாக வீட்டின் உரிமையாளர்கள் கண்டுபிடிப்பது கடினம் என்று கருதப்படும் உரிமையாளர்களுக்கு, மாவட்ட மற்றும் நில அலுவலகங்கள் மூலம் தேடல்கள் நடத்தப்படும் என்று சிவநேசன் கூறினார்.
“உரிமையாளரைக்கு எதிராக சட்ட நடவடிக்கையின் சொத்தை பறிமுதல் செய்து ஏலம் விடலாம்,” என்று அவர் கூறினார்.
பேராக் முழுவதும் 780 டிங்கி நோய் மட்டுமே பதிவாகியுள்ளன என்றும், இது கடந்த ஆண்டு இதே காலகட்டமான 2,457 வழக்குகளை விடக் குறைவு என்றும் சிவநேசன் கூறினார்.
கிந்தா மாவட்டத்தில் டிங்கி பாதிப்பு கணிசமாகக் குறைந்துள்ளது. இறப்பு சம்பவங்கள் எதிவும் பதிவாக வில்லை .
இந்த நோயைக் கட்டுப்பட்டுத்து தொடர்ந்து கடும் நடவடிக்கையை மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

