
தாப்பா ஏப்ரல் 12-
தாப்பா நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆயர் கூனிங் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
இதில் பிஎஸ்எம் கட்சியின் சார்பில் பவானி போட்டியிடுகிறார். இவர் ஒரு இளம் பட்டதாரி ஆவார்.
தோட்ட பாட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் உரிமைக்காக பல போராட்டங்களில் பங்கேற்றவர்.
பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி தலைவராக கொண்டிருக்கும் உரிமைக் கட்சி இந்த இடைத்தேர்தலில் பவானிக்கு முழு ஆதரவை தெரிவித்து களத்தில் இறங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

