
தாப்பா, ஏப்ரல் 12-
வரும் ஏப்ரல் 26 ஆம் திகதி நடக்க விருக்கும் ஆயர் கூனிங் ( Air Kuning) சட்டமன்ற இடைத்தேர்தலில் இந்திய வாக்காளர்கள் மலேசிய சோசலிசக் கட்சிக்கு (PSM) ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன் என்று பகாங் மாநில உரிமை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கணேசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
மலேசிய சோசலிசக் கட்சி சார்பாக களமிறங்கும் சகோதரி பவானி அவர்கள் இரண்டாவது முறையாக ஆயர் கூனிங் சட்டமன்ற தேர்தலுக்கு போட்டியிடுகிறார்.
சகோதரி பவானி அவர்கள் ஒரு வழக்கறிஞராக இருந்தாலும், தொடர்ந்து மலேசிய மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு குறிப்பாக இந்திய சமுகத்தின் உரிமைக்காக
குரல் கொடுத்து போராடி வருகிறார்.
தோட்டத் தொழிலாளர்களுக்கான வீட்டுரிமைச் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காணவும் சமூக நீதியை நிலைநாட்டவும் முழு மூச்சாக களப்பணியில் ஈடுபடும் ஒரு பெண் போராளி.
நாடு சுதந்திரம் அடைந்து 68 ஆண்டுகள் ஆயினும் மலேசியாவில் மூன்றாவது பெரிய இனமான தமிழ் சமுகத்தின் நிறைய பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாத ஒரு தொடர்கதையாகவே இருக்கிறது என்பது நாம் அறிந்ததே.
இந்திய சமூகம் வாக்குறுதியை நம்பியும் சலுகையை நம்பியும் இனி ஓட்டு போடாதீர்கள்,
இதற்கு முன்பு நம்மிடம் சொன்ன வாக்குறுதிகளை அரசியல்வாதிகள் செய்தார்களா என்று சிந்தித்து பார்த்து வாக்கு செலுத்துங்கள். தேர்தல நேரத்தில் நடத்தப்படும்.
கலைநிகழ்ச்சிகள், கொடுக்கப்படும்,
சலுகைகள்,
இலவசங்கள் எல்லாம் நமக்கு தற்காலிக மகிழ்ச்சியை கொடுக்கும் ஒழிய நிரந்தர வெற்றியை ஒருபோதும் தந்து விடாது.
நமக்கு வேண்டியது உரிமை. உரிமைகளை பெற்று தராத எந்த சலுகையும் நமக்கு பயன் தர போவதில்லை.
மக்கள் உங்களை நீங்கள் அரசியல்படுதி கொள்ளுங்கள். அரசியல் தெளிவு பெறுங்கள்.
ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.
ஆயர் கூனிங் இந்திய சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நன்கு அறிய கூடிய சகோதரி பவானிக்கு இந்திய சமூகம் ஒற்றுமையாக இருந்து தங்களின் முழு ஆதரவை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் சொன்னார்.

