
ஷா ஆலம், ஏப்ரல் 13-
சிலாங்கூர் மாநில கோல சிலாங்கூர் தொகுதி கெஅடிலான் தேர்தலில் சிவபாலன் முகுந்தன் வெற்றி பெற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
தலைவர் பதவிக்கு மொத்தம் ஆறு பேர் போட்டியிட்டனர் . இதில் சிவபாலன் 1,498 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
நடப்பு தலைவர் தீபன் சுப்ரமணியம் 1,061 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
கெஅடிலான் கட்சியின் ஒரு மிகப்பெரிய தலைவராக தீபன் விளங்கி வந்தார்.
அவரின் தோல்வி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.