
கிள்ளான் ஏப்ரல் 13-
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற கோத்தா ராஜா கெஅடிலான் தொகுதி தேர்தலில் வெற்றி நடப்பு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் அமோக வெற்றி பெற்றார்.
இவருக்கு 4,643 வாக்குகள் கிடைத்தன.
எதிர்த்து போட்டியிட்ட மகேந்திரன் 1,615 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
கோத்தா ராஜா சட்டமன்ற தொகுதி மக்களுக்கு டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் மிகச் சிறந்த முறையில் சேவையாற்றி வருகிறார் என்பதற்கு இந்த வெற்றி ஒரு அடையாளம்.

