2023 புத்தாண்டை மகிழ்ச்சியோடு வரவேற்போம்

2022 ஆண்டுக்கு விடை கொடுத்து 2023 ஆம் புத்தாண்டை மகிழ்ச்சியோடு வரவேற்போம் என்று செராஸ் கெஅடிலான் தொகுதி உதவித் தலைவர் மற்றும் பிரபல மேடை நாடக இயக்குனர் எஸ்.டி. பாலா தெரிவித்தார்.

புதிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நாடும் இந்திய சமுதாயமும் சிறந்து விளங்க பிரார்த்தனை செய்வோம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

My family network group ஏற்பாட்டுக் குழு தலைவர் செல்வராஜா தலைமையில் நேற்று புத்தாண்டை வரவேற்கும் இனிய நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இயக்குனர் எஸ்.டி. பாலா, அடாபி நிறுவனத்தின் இயக்குநர் காளியப்பன் ஆகியோருக்கு சிறப்பு செய்யப்பட்டது.

பிறந்த நாளை கொண்டாடிய லெம்பா பந்தாய் கெஅடிலான் தொகுதி உதவித் தலைவர் எஸ். பக்தாவலச்சலம், பிரபல இசை கலைஞர் டாக்டர் சேம் சந்தானம், டிஎன்பி கிளப் கால்பந்து விளையாட்டாளர் மணிமாறன் மற்றும் தொழிலதிபர் பாலமுணி ஆகியோருக்கு சிறப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சிலாங்கூர் இந்தியர் விளையாட்டு பேரவை உதவித் தலைவர் டத்தோ டாக்டர் மனோ பரமசிவம், டிஎன்பி சந்திரசேகரன், டத்தோ ஜெகா, டாக்டர் ஜோக்கிம், டாக்டர் யோகேஸ்வரன், லெம்பா பந்தாய் கெஅடிலான் தலைவர்கள் ரேமன், ஸ்டார் மணியம், டாக்டர் மகேந்திரன், Vijaya vagini இசைக் குழு தலைவர் டாக்டர் ராஜூ உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles