கால்பந்து உலகின் முடிசூடா மன்னன் பீலே காலமானார்

பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து ஜாம்பவான் பீலே (வயது 82) புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார

அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது.

பின்னர் கடந்த ஆண்டு செப்டம்பரில் இருந்து அவருக்கு கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட பீலே, பிரேசிலின் சாவ் பாவ்லோ மருத்துவமனையில் கடந்த மாதம் இறுதியில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி பீலே இன்று உயிரிழந்ததாக அவரது மகள் தனது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

பீலே மறைவுக்கு உலகெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்கள், இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

பிரேசில் நாட்டிற்காக மூன்று முறை உலகக் கிண்ணத்தை வென்று தந்த பீலே, உலகக் கிண்ண கால்பந்து அரங்கில் முடிசூடா மன்னனாக சிறந்த கால்பந்து விளங்குகிறார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles