
கோலாலம்பூர்: ஏப்ரல் 17-
பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொள்ளும் வகையில் கே.எல்.டவர் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என்று தகவல் தொடர்பு அமைச்சர் பாமி பட்சில் இன்று தெரிவித்தார்.
இந்த கேஎல் டவர் கோபுரம் அரசாங்கத்திற்கு சொந்தமானது. பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்பு பழுது பார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
தனது அமைச்சகத்தைச் சேர்ந்த ஒரு குழு சமீபத்தில் கோபுரத்தைப் பார்வையிட்டதாகவும், அது பாழடைந்த நிலையில் இருப்பதைக் கண்டறிந்ததாகவும் அவர் கூறினார்.
பொதுமக்களிடமிருந்தும் இதே போன்ற புகார்கள் பெறப்பட்டதாக அவர் கூறினார்.

