
ஆசிரியர்களுக்கான போட்டியில் மொத்தம் 27 தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர். இதில் உலு சிலாங்கூர் மாவட்டத்தைப் பிரதிநிதித்துச் தேசிய வகை பத்தாங்காலி தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
8 ஆட்டங்களில் கலந்து கொண்ட இப்பள்ளி ஆசிரியர்கள்
இறுதிப் போட்டிக்கு தேர்வாகினர். 27 பள்ளிகளில் தேசிய வகை பத்தாங்காலி தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் சிலாங்கூர் மாநில ரீதியில் இரண்டாவது இடத்தை வென்று பள்ளிக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்தனர்.
இவ்வேளையில் பள்ளிக்கும் ஆசிரியர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.