

கோலாலம்பூர் ஏப்ரல் 28-
வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி அட்சயத் திருதி திருநாள். அட்சயத் திருதியை என்பது அதிக அதிஷ்டம் தரும் நாளாக கருதப்படுகிறது.
‘அட்சயம்’ என்ற சொல்லின் பொருள் ‘குறையாது’ அல்லது ‘அழியாது’ என்பதாகும்.
இந்த நாளில் புதிய தொடக்கங்களை செய்வது, தானம் செய்வது, மற்றும் தங்கம் போன்ற விலைமதிப்புள்ள பொருட்களை வாங்குவது ஆகியவை நல்ல அதிஷ்டத்தை தரும் என்று நம்பப்படுவதாக மலேசிய இந்தியர் பொற்கொல்லர் சங்கத்தின் தலைவர் டத்தோ ஹாஜி அப்துல் ரசூல் தெரிவித்தார்.
ஏப்ரல் 30ஆம் தேதி காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை அக்சயத் திருதி நடப்பில் இருக்கும். இந்த நேரத்தில் தங்கத்தை வாங்கி சேர்ப்பது பாரம்பரியமாக உள்ளது. இந்த நல்ல நேரத்தில் தங்கம் வாங்கினால் அது பல மடங்கு உயரம் தரும் என்பது ஐதீகமாகும்.
இந்த அக்சயத திருதியை முன்னிட்டு மலேசிய இந்திய நகை வணிகர்கள் பொற்கொல்லர்கள் உறுப்பினராக இருக்கும் நகை கடைகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளையும் வழங்க உள்ளன.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி மக்கள் நகைகளை வாங்கி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.