

களும்பாங், ஏப்ரல் 28-
நாட்டில் புகழ்பெற்ற மைஸ்கில் அறவாரியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இளையோர் கிண்ண கால்பந்து போட்டியில் மைஸ்கில் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
மைஸ்கில் அறவாரியத்தின் Dover Elevator இளையோர் கிண்ண கால்பந்து போட்டி நேற்று மைஸ்கில் திடலில் விறுவிறுப்பாக நடைபெற்றது.


17 வயதுக்கு உட்பட்ட இந்த போட்டியில் எட்டு அணிகள் பங்கேற்றன.இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மைஸ்கில் அணியினர் முதல் நிலையில் வெற்றி பெற்றனர்.
ராயல் சிலாங்கூர் அணியினர் இரண்டாவது இடத்தில் வெற்றி பெற்றனர். களும்பாங் இடைநிலைப் பள்ளி அணியினர் மூன்றாவது இடத்தை பிடித்தனர்.


மைஸ்கில் அணியின் ஆட்டக்காரர் மகேஸ்வரன் சிறந்த ஆட்டக்காரருக்கான விருதை தட்டிச் சென்றார். களும்பாங் ஜூனியர் அணியின் அஷிம் முஹாய்மின் சிறந்த கோல் கீப்பர் விருதையும் இறுதியாட்டத்தின் சிறந்த ஆட்டக்காரராக கோகுலன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
வெற்றி பெற்ற அணிகளுக்கும் போட்டியாளர்களுக்கும் பரிசுகளும் பதக்கங்களும் பரிசாக வழங்கப்பட்டது.
மைஸ்கில் அறவாரியத்தின் நிர்வாக இயக்குனர் வழக்கறிஞர் பசுபதி மற்றும் மைஸ்கில் அரவாரியத்தில் செயல்முறை அதிகாரி தேவா மற்றும் Dover Elevator நிறுவனத்தின் அதிகாரிகள் வெற்றி பெற்ற குழுக்களுக்கு பரிசுகளை எடுத்து வழங்கி பாராட்டினார்.