


ஈப்போ, மே 1-
பேரா மாநிலத்தில் உள்ள இந்து ஆலயங்கள் மற்றும சமய வளர்ச்சிக்கு அரசாங்கம் தொடர்ந்து நிதி உதவிகள் வழங்கி வருவதுடன் அரசாங்க நிலங்களில் உள்ள ஆலய நில விவகாரங்களை சமுகம் முறையில் தீர்வுக்கான உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தம்முடைய அனுமதியின்றி எந்த ஆலயங்களும் பேராவில் உடைபடாது அவைகளுக்கு சுமுகமான முறையில் தீர்வுக்காணகபடும் என்று பேராக் மாநில அரசு சுகாதாரம், மனிதவளம், தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் இந்திய சமூக விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் அ. சிவநேசன் கூறினார்.
சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்பு கட்டபட்டதாக கூறப்படும் ஆலயங்கள் பல இது வரை அந்த ஆலயங்களுக்கு நிலபட்டா இன்றி இருந்து வருவது கவலையை அளிப்பதாக அவர தெரிவித்தார்
அவைகளில் பல ஆலயங்கள் அரசாங்க நிலத்தில் இருந்து , அவைகளுக்கு அந்த ஆலயங்களை நிர்வகித்து வரும் அதன் பொறுப்பாளர்கள் மெத்தன போக்காக இருந்ததால் இன்று பல பிரச்னைகளை எதிர்நோக்கி வருவதாக குறிப்பிட்டார்..
இனியும் புறம் போக்கு நிலங்களில் ,
சாலை யோரங்களில் மற்றும் அரசாங்க நிலங்களில் ஆலயங்களை கட்டுவதை தவிக்கப்படவேண்டும் என்று சிவநேசன் வலியுறுத்தினார்.
இன்று பேரா , சிம்மோரில் உள்ள கந்தான் மலை கந்தன் மலை ஸ்ரீ மாகாளியம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெற்ற பேரா மாநில இந்து சஙசங்கத்தின் 48 ஆவது ஆண்டுக் கூட்டத்தை தொடக்கி வைத்தப் பின்னர் இவ்வாறு அவர் இவ்வாறு கூறினார்.
இந்த நாட்டி இந்து மக்களை எந்த அரசாங்கமும் புறக்கணிக்கத்ததில்லை மாறாக இந்து சமய வளர்ச்சிக்கும் ஆலயங்கள் நிர்மாணிக்கவும் நிதி உதவிகள் வழங்கி வருவதாக இந்த நிகழ்வில் சிறப்பு வருகை புரிந்த மலேசிய இந்து சங்க தேசிய துணைத் தலைவர் கணேஷ் பாபு ராவ் கூறினார்.
இந்து சங்கம் நடத்தி வரும் மாநாடு மற்றும் திலுமுறை விழாவிற்கும் மடானி அரசாங்கம் பெரும் ஆதரவும் நிதி உதவியையும்்வழங்கி வருகிறது என்றார்.
இந்ந நாட்டில் இந்து சங்கம் தோற்றுவிக்கப்பட்டு 60 ஆண்டுகள் கடந்து விட்டது.
அந்த காலக் கட்டத்தில் ஆலயங்கள் எதிர் நோக்கி வந்த பல நில விவகாரங்கள் அந்தந்த மாநில அரசாங்க பிரநிதிகளுடன் இணைந்து பிரச்சனைகளுக்கு தீர்வுக்காணப்பட்டதாக தெரிவித்தார்.
பேரா மாநிலத்திலும் தற்பொழுது நில பிரச்னைகள் தலை தூக்கியுள்ளது.
அம்மாநிலத்தில் உள்ள அரசு ஆட்சிக் குழு உறுப்பினர் சிவநேசன் துணை நின்று உதவிக்கரம் வழங்கி வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டார்.
இந்து சங்கம் மேற்கொண்டு வரும் பல நடவடிக்கைகளுக்கு ம.இ.கா. மற்றும மக்கள் சக்தி கட்சிகளும் ஆதரவு வழங்கி வருவதையும் கணேஷ் பாபு சுட்டிக் காட்டிப் பேசினார்.
மாநில இந்து சங்க செயலாளர் சிவம் பழனி சாமியின் வரவேற்புரையுடன் தொடங்கி பேரா மாநில இந்து சங்க்மாநாட்டில் அதன் தலைவர் சுந்தரசேகரன் பெருமாளின் தலைமையுரையும் இடம் பெற்றது.
அவர் ஆற்றிய உரையில் பேரா மாநிலத்தில் சில ஆலயங்கள எதிர்நோக்கியுள்ள விவகாரங்களுக்கு ஆர்பாட்டம் இன்றி சுமுகமான முறையில் தீர்வுக்காணப்பட்டு வருவதாக கூறினார்.
இந்த நிகழ்வில் பேரா மாநிலத்தில் சமய வளர்ச்சிக்கு ஆதரவு வழங்கியவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

