பேராக் இந்தியப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டுறவுக் கழகம் 9 மில்லியன் சொத்துடைமையை கொண்டுள்ளது!

ஈப்போ, மே. 5: பேராக் மாநில இந்தியப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டுறவுக் கழகம் தங்களது உறுப்பினர்களுக்கு இவ்வாண்டு 3.0 சதவீத இலாப ஈவு வழங்கவுள்ளதாக இக்கழகத்தின் தலைவர் சி. விஜயன் இங்கு நடைபெற்ற 61 ம் ஆண்டு பொதுக்கூட்டத்தில் அறிவிப்பு செய்தார்.

கடந்தாண்டில் உறுப்பினர்களுக்கு 1.9 சதவீத இலாப ஈவு மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால், இவ்வாண்டில் கூட்டுறவு கழகத்தின் வருமானம் அதிகரித்ததால் உறுப்பினர்களுக்கும் இலாப ஈவு அதிகமாக வழங்க முடிந்துள்ளதாக அவர் மகிழ்ச்சியுடன் கூறினார்.

கடந்த காலங்களில் இக்கூட்டுறவு கழகத்தின் சொத்துடைமை வெறும் சுமார் 2 மில்லியன் ரிங்கிட்டாகும். ஆனால், தற்போதைய நிலவரப்படி இக்கழகத்தின் சொத்துடைமை சுமார் 9 மில்லியன் மதிப்பை கொண்டுள்ளது. இதற்கு இக்கழகத்தின் உறுப்பினர்கள் வாரிய உறுப்பினர்கள் மீது வைத்த நம்பிக்கையும், உழைப்பும் என்றால் மிகையாகாது. குறிப்பாக, வாரியக்குழுவினரின் கடுமையான உழைப்பும், தன்னம்பிக்கையும் என்று அவர் பாராட்டினார்.

கடந்த 1964 ம் ஆண்டில் உருவான இந்தக்கூட்டுறவுக் கழகம் 61 ம் ஆண்டு பொதுக்கூட்டத்தை மிகவும் சிறப்பாக நிறைவு செய்தது. இம்முறை சுமர் 500 உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர். இக்கூட்டத்தில் பல வகையான கேள்விகள் முன் வைக்கப்பட்டது. அதற்கான பதிலையும் வாரியக்குழுவினர் வழங்கி சிறப்பித்தனர் என்று அவர் குறிப்பிட்டார்.

இவ்வாண்டு வாரிய உறுப்பினர்கள் தேர்வு செய்யும் பொருட்டு தேர்தல் முனைவர் சேகர் நாராயணன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இத்தேர்தலில் மீண்டும் கழக வாரிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் எஸ்.விஜயன், வி.கலையரசு, ஜே.நளினி மற்றும் எஸ்.தினகரன் ஆகியோர் வெற்றிப்பெற்றனர்.

நிறைவுவிழாவில், இக்கூட்டுறவு கழகத்தில் வாரிய உறுப்பினர்களாக செயல்பட்டு தற்போது பணிநிறைவை மேற்கொண்ட பேராக் மாநில தமிழ்ப்பள்ளிகளின் மேனாள் அமைப்பாளர் மு.அர்ஜுணன் மற்றும் மேனாள் புந்தோங் அரசினர் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் வள்ளியப்பன் ஆகியோர் சிறப்பிக்கப்பட்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles