



கோலாலம்பூர், மே 6-
தித்தி வங்சா நாடாளுமன்ற ம இகா தொகுதியின் துணை செயலாளர் மற்றும் பிரிதீவி கொண்டோ கம்போங் பண்டான் மஇகா கிளைத் தலைவர் ராஜா காளிமுத்து தமது 65 ஆவது பிறந்த நாளை மிகவும் விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தார்.
தித்தி வங்சா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ஜோகாரி தலைமைத்துவத்தின் கீழ் MPPWP எனப்படும் தித்தி வங்சா நாடாளுமன்ற தொகுதி இந்தியர் பிரதிநிதியாக கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக சிறந்த முறையில் சமுதாய பணியாற்றி இருக்கிறார்.
கடந்த 1980 ஆம் ஆண்டில் மஇகா கம்போங் பண்டான் கிளையில் கே.ஆர்.சி. செல்லையா கிளையில் இளைஞர் பிரிவு தலைவராக பதவி ஏற்று தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.
கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக ம இகா கிளைத் தலைவர் என்ற முறையில் இவர் இந்திய சமுதாயத்திற்கு சிறப்பான சேவையை வழங்கி இருக்கிறார்.
அனைவரிடமும் அன்பாக பார்க்கக்கூடிய ராஜா காளிமுத்து தித்தி வங்சா நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமான அரசியல் பிரமுகர் ஆவார்.
கம்போங் பண்டான் இந்தியன் செட்டில்மென்ட் மண்ணின் மைந்தர் என்று வர்ணிக்கப்படும் ராஜா காளிமுத்து அவர்கள் 5-5 2025 ஆம் தேதி தனது 65 ஆவது வயது பிறந்த நாளை மிகவும் விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தார்.
ராஜா காளிமுத்து அவர்களின் அன்பு துணைவியார் ஜூலியானா, புதல்வர்கள் டில்லன் ராஜா, கார்த்திக் ராஜா ஏற்பாட்டில் இந்த பிறந்த நாள் விழா மிகவும் விமர்சையாக நடைபெற்றது.
இந்த பிறந்த நாள் விழாவில் புக்கிட் கியாரா மண்ணின் மைந்தர் யாங் பெர்பஹியா டாக்டர் மனோ பரமசிவம், அண்ணன் மாலைமுனி, டத்தோ டாக்டர் ஜெகா, புகைப்பட கலைஞர் பி.மலையாண்டி, டாக்டர் ஜோக்கிம், யோகேஸ்வரன், விலாயா மாநில சிலம்பக் கழக தலைவர் டாக்டர் உதயகுமார், மூத்த அரசியல்வாதி தோகையடி சண்முகம், டி தம்பி உரிமையாளர் சுப்ரா, மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன், கம்போங் பண்டான் குத்வாரா ஆலயத் தலைவர் இண்டர்ஜிட் சிங் நிர்வாக குழுவினர் , ராஜா காளிமுத்து குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் இந்த பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு மனதார வாழத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

