‘ஆபரேஷன் சிந்தூர்’-பல ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த தீவிரவாதிகள் இருவர் பலி

ஆபரேஷன் சிந்தூரில் இந்தியா நடத்திய தாக்குதலில் முக்கிய தீவிரவாதிகள் இருவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியது. கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் 2 பேர் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் அப்துல் மாலிக் மற்றும் முடாசிர் . முரித்கேவில் நடத்தப்பட்ட தாக்குதலில் முக்கிய தீவிரவாதியான முடாசிர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியது.

பகல்பூரில் ஜெய்ஷ் – இ – முகமது என்ற தீவிரவாத அமைப்பினுடைய முக்கிய பயிற்சி மையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அதன் தலைவர் மசூத் ஆசாத்தினுடைய வீடும் தாக்குதலுக்கு உள்ளானது.

இதில் ஜெய்ஷி முகமது தீவிரவாத அமைப்பின் தலைவராகவும், இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியாக உள்ள மசூத் ஆசாத்தினுடைய குடும்பத்தினர் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles