
இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் மசூத் அசாரின் 14 உறவினர்கள் மற்றும் 3 தீவிரவாத அமைப்பின் 70 தீவிரவாதிகள் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதுங்கியிருந்த பாகிஸ்தானின் கோட்லி தீவிரவாத முகாமின் தளபதியும் இஸ்லாமிய மத தீவிரவாத போதகருமான காரி முகமது இக்பால் மற்றும் 10 தீவிரவாதிகள் ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்டனர். அதேபோல் பாகிஸ்தானின் பஹாவல்பூரில் நடந்த விமானத் தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மவுலானா மசூத் அசாரின் உறவினர்கள் 14 பேர் கொல்லப்பட்டனர்.
இவர்களில் மசூத் அசாரின் சகோதரி மற்றும் மைத்துனரும் அடங்குவர். பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அழிக்கப்பட்ட 9 தீவிரவாத முகாம்களில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பஹவல்பூர் தலைமையகத்தில் 30 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். லக்ஷர்-இ-தொய்பா அமைப்பின் முரிட்கே தளத்தில் 25 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியான முசாபராபாத்தில், ஹிஸ்புல் முஜாகிதீன் முகாமை சேர்ந்த 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். முக்கியமான தீவிரவாதிகள் பட்டியலில், ஜுபைர் அஹ்மத் வானி என்பவன், ஜம்மு-காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டவன். இவன் பஹல்காம் தாக்குதலுக்கு தொடர்புடையவன் என்று கூறப்படுகிறது.
சையத் முகமது அலி என்பவன் லக்ஷர்-இ-தொய்பா அமைப்பின் மூத்த உறுப்பினர் ஆவான். இவன் முரிட்கே முகாமில் கொல்லப்பட்டான். மசூத் அகமது மிர் என்பவன் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முக்கிய பயிற்சியாளன் ஆவான். இவன் பஹவல்பூர் தாக்குதலில் கொல்லப்பட்டான். இந்த தீவிரவாதிகளின் உயிரிழப்பு உறுதிப்படுத்தப்பட்டாலும், மற்றவர்களின் பெயர்கள் அல்லது அடையாளங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
dinakaran

