
ஈப்போ, மே.8: இந்நாட்டில் மிகவும் பிரசித்து பெற்ற கிந்தா இந்தியர் சங்கத்தில் 20 புதிய உறுப்பினர்கள் இணைந்தனர். இந்த செயல்முறை புதிய உட்வேகத்தை மற்றும் இச்சங்கத்தை வளப்படுத்தும்.
இத்தகைய உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டம் சீராக செயல்பட்டால், இச்சங்கம் எதிர்வரும் காலத்தில் பல சவால்களை எதிர்நோக்கும் வல்லமை கொண்டவையாக திகழும் என்று கிந்தா இந்தியர் சங்க தலைவர் டத்தோ ஆர்.தங்கராஜா கூறினார்.
தற்போது தம்முடைய தலைமைத்துவத்தின் கீழ் சட்டவிதிமுறைப்படி புதிய உறுப்பினர்கள் இணைக்கும் திட்டம் முறையாக அமலாக்கம் செய்யப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
இச்சங்கத்தில் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்படுவர்களுக்கு பல சலுகைகள் மற்றும் சிறப்பும் வழங்கப்படும். ஆகவே, இச்சங்கத்தில் உறுப்பினராக பொதுமக்கள் அன்போடு அழைக்கப்படுகினறனர். ஆர்வமுள்ளவர்கள் இச்சங்கத்தின் உறுப்பினர் விண்ணப்ப பாரங்களை இங்குள்ள மண்டபத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்று அவர் மகிழ்ச்சியுடன் கூறினார்.