நான்கு இலக்கு கடைகளுக்கு மூடுவிழா!
வருமானத்தை கெடா அரசு இழக்கும்

4 இலக்கு கடைகளுக்கு கெடா மாநில அரசு விதித்துள்ள தடையானது இதன் முலம் வரியாக பெற்று வந்த வருமானத்தை பாஸ் அரசாங்கம் இழக்க நேரிடும் என்று கூறப்படுகிறது.

அரசியல் ரீதியாக கெடா பாஸ் அரசுக்கு ஒரு பலமாக அமைந்தாலும் அது வருமானத்தை இழப்பதோடு சட்டவிரோதமாக செயல்படும் சூதாட்ட நடவடிக்கைகளை கட்டுப் படுத்த அதிக சிரமத்தை எதிர்நோக்க வேண்டியுள்ளது என்று பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி தெரிவித்தார்.

கெடா மாநில சட்டமன்றத் தேர்தலில் சமூகத்தின் ஆதரவை பெற முடியும் என்று பாஸ் கட்சி நம்புகிறது.

இது அரசியல் ரீதியாக பாஸ் கட்சிக்கு பலமாக அமைந்தாலும் சூதாட்டம் சட்டவிரோதமாக செயல்பட வழிவகுக்கும் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles