துணை தலைவர் பதவிக்கு போட்டியிடுவது என் சொந்த முடிவு என்கிறார் நூருல் இஸா!

கோலாலம்பூர், மே 18-
நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் கெஅடிலான் கட்சியின் தேசிய துணை தலைவர் பதவிக்கு நடப்பு துணை தலைவர் ரபிஸி ரம்லியை எதிர்த்து நூருல் இஸா போட்டியிடுகிறார்.

இந்நிலையில் கெஅடிலான் கட்சியின் தேசிய துணை தலைவர் பதவிக்கு போட்டியிடுவது என் சொந்த முடிவு என்று நூருல் இஸா அன்வார் இப்ராஹிம் இன்று தெரிவித்தார்.

நான் எந்த முடிவு எடுத்தாலும் அது சொந்த முடிவாக தான் இருக்கும் கட்சி தலைவர் கருத்துகளுக்கு எதிராக நான் பலமுறை பேசியுள்ளேன்.

மேலும் நான் கெஅடிலான் கட்சிக்கு புதியவர் அல்ல. ரெபோமாசி காலத்தில் இருந்தே கட்சியில் இணைந்து பல போராட்டங்களில் பங்கேற்று இருக்கிறேன்.

அரசியலில் நான் பல சோதனைகள் மற்றும் சவால்களை சந்தித்து இருக்கிறேன்.

கட்சி தொடங்கப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை இருக்கிறேன்.

கடந்த காலங்களில் நான் உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட போதும் எனக்கு எதிர்ப்பு இருந்தது என்று இன்று நடைபெற்ற தமிழ் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles