

கோலாலம்பூர் மே 18-
கோவில்கள் உடைபடும் அல்லது இடம் மாற்றம் செய்யப்படும் விவகாரத்தில் ஓரு சமூகமான தீர்வு நடைமுறை பின்பற்ற வேண்டும் என்று நூருல் இஸா அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தி உள்ளார்.
கோவிலாக இருந்தாலும் அல்லது மஸ்ஜிட்டாக இருந்தாலும் ஒரு சரியான நடைமுறை பின்பற்ற வேண்டும்.
கோவில்கள் உடைபடும் பிரச்சினையை எதிர் நோக்கி இருந்தால் அதற்கு சரியானவகையில் தீர்வு காண முயற்சிகள் எடுக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட தரப்புகள் வாயிலாக தீர்வு காண்பதே சிறந்தது.
இதைதான் நானும் வலியுறுத்த விரும்புகிறேன் என்று இன்று தமிழ் ஊடகவியலாளர்களை சந்தித்து உரையாடிபோது அவர் இதனை தெரிவித்தார்.

