இந்தியர்களின் மன ஆதங்கம் எனக்குப் புரிகிறது! நூருல் இஸா கூறுகிறார்

கோலாலம்பூர் மே 19-
நம்பி வாக்களித்த இந்திய சமுதாயத்தின் உணர்வுகள் எனக்கு நன்றாக புரிகிறது என்று லெம்பா பந்தாய் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் நூருல் இஸா அன்வார் தெரிவித்தார்.

கெஅடிலான் துணை தலைவர் பதவிக்கு போட்டியிடும் நூருல் இஸா அன்வார் இப்ராஹிம் இன்று தமிழ் ஊடகவியலாளர்களை சந்தித்து உரையாடினார்.

இந்த சந்திப்பில் அவரிடம் பல கேள்விகள் முன் வைக்கப்பட்ட போது அனைத்து கேள்விகளுக்கும் முகம் சுளிக்காமல் பதில் கொடுத்தார்.

பக்கத்தானுக்கு ஆதரவாக இந்திய சமுதாயம் நம்பி வாக்களித்தது.

ஆனால் இந்திய சமுதாயத்தின் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை.
இது சமுதாயத்தின் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தி வருகிறது என்று நிருபர்கள் கேள்வியை முன் வைத்தனர்.

இந்த கேள்விக்கு பதில் அளித்த அவர் இந்திய சமுதாயத்தின் உணர்வுகள் எனக்கு நன்றாக புரிகிறது என்றார்.

இந்தியர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண கட்டமைக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு திட்டமும் முறையாக கட்டமைக்கப்பட்டு வருகிறது.அனைத்தும் முறையாக அமல்படுத்த கால அவகாசம் தேவைப்படுகிறது.மேலும் அனைவரின் ஆதரவோடு தேவைப்படுகிறது.

அண்மையில் கிள்ளான் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்திய சமுதாயத்தின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்திய சமுதாயத்தின் கல்வி,: பொருளாதாரம், சமூக சீர்கேடுகளும் இதில் அடங்கும் என்று அவர் சொன்னார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles