
மலேசிய இந்திய சமுதாயத்தில் மூத்த வர்த்தக அமைப்பான கோலாலம்பூர்-சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்தின் 96 வது ஆண்டு கூட்டம் இன்று நடைபெற்றது.
கிள்ளான் நாடாளுமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினரும் சமூக செயற்பாட்டாளருமான சார்லஸ் சந்தியாகு இன்றைய ஆண்டு கூட்டத்தை தொடக்கி வைத்ததார் என்று தெரிவித்த நிவாஸ்,
இந்த வர்த்தக சங்கம் சீரான வளர்ச்சியை காண வேண்டும் என்றால், மலேசிய இந்திய சமுதாயத்தின் எண்ணிக்கை அதிகரிப்பதில் முனைப்பு கட்ட வேண்டும் என்று தெரிவித்தார்.

மலேசிய இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்களை பொறுத்தமட்டில், பெரும்பாலும் பாரம்பரிய தொழில்களை தான் மேற்கொள்கின்றனர்.
இத்தகைய பாரம்பரிய தொழில்களுக்கு ஆதரவு வேண்டும் என்றால் நம்முடைய மக்கள் தொகை பெரிய அளவில் இருக்க வேண்டும்; இந்த இலக்கில் அனைத்து தரப்பினரும் முனைப்பு காட்ட வேண்டும் என்று சார்லஸ் சொன்ன கருத்தை இந்த சங்கம் கருத்தில் கொள்கிறது என்று நிவாஸ் தெரிவித்தார்.

அடுத்தது பொருளாதார வளர்ச்சி, மலேசிய இந்திய சமுதாயத்தின் மக்கள் தொகையும் அதன்வழி இந்திய தொழில் முனைவோரும் தொழிலதிபர்களும் மேற்கொள்ளும் பாரம்பரிய தொழிலும் வளர்ச்சி கண்டால் இயல்பாகவே நம் பொருளாதார நிலை வளர்ச்சி காணும் என்று அவர் தெரிவித்தார்.
நாட்டின் மையப் பகுதியில் இருக்கின்ற இந்த கோலாலம்பூர்- சிலாங்கூர் இந்திய வர்த்தக தொழிற்சங்கத்தைப் பற்றி, பரவலாக யாருக்கும் தெரியவில்லை என்பதால் முகநூல் ‘டிக் டோக்’ போன்ற சமூக ஊடக தலங்களை அதிகமாகப் பயன்படுத்தி, அதன் வழி, இந்திய வர்த்தக- சங்கம் மேற்கொள்கின்ற அனைத்து நடவடிக்கையையும் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்த ஆலோசனையை சங்கம் கவனத்தில் கொள்கிறது என்று நிவாஸ் தெரிவித்தார்.
மலேசிய இந்திய சமுதாயத்தில் பாரம்பரிய தொழில்களான ஜவுளி பொற்கொல்லர் உள்ளிட்ட தொழில்களுக்கு வெளிநாட்டு தொழிலாளர் பற்றாக்குறை தற்பொழுது தனித்து உள்ள நிலையில் முடி திருத்தும் தொழில்களுக்கு இன்னும் தொழிலாளர் பற்றாக்குறை நிலவுவதால் அது சீர்படுத்துவதற்கான முயற்சியில் தங்கள் ஈடுபடுவோம் என்றார்.
கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்திற்கு அடுத்த 2026-ஆம் ஆண்டில் நடைபெற இருக்கின்ற 97 ஆம் ஆண்டு கூட்டத்தை பிரமாண்ட அளவில் நடத்த திட்டமிட்டு வருகிறோம்.
இதன் தொடர்பில் இப்பொழுது சங்கத்தின் துணைத் தலைவர் தலைமையில் ஏற்பட்டு குழு நியமிக்கப்பட்டுள்ளது பிரதமரை அழைக்கின்ற எண்ணமும் இருக்கிறது இதன் தொடர்பில் அடுத்த கட்ட தகவலையும் ஊடகத்திற்கு முறைப்படி அறிவிப்போம் என்றும் நிவாஸ் தெரிவித்தார்.

