
பேங்காக், மே 19-
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற தாய்லாந்து பேட்மிண்டன் போட்டியில் மலேசியாவின் இரட்டையர் ஜோடி தீனா – பெயர்லி தான் ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
நேற்றிரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் தீனா ஜோடி 21-16, 21-17 என்ற புள்ளி கணக்கில் நேர் செட்டுகளில் தென் கொரியாவின் நா இயூன் – யோன் வூ ஜோடியை மிக எளிதில் வீழ்த்தியது.
இந்த ஆண்டில் தீனா ஜோடி வென்ற முதல் சாம்பியன் பட்டம் இதுவாகும்
இந்த போட்டியில் வெற்றி பெற்ற தீனா ஜோடிக்கு 1 லட்சத்து 61 ஆயிரம் வெள்ளி ரொக்கப் பணமாக வழங்கப் பட்டது.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் மலேசியாவின் ஆரோன் – வூய் யிக் ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே தாய்லாந்து பேட்மிண்டன் போட்டியில் மலேசியாவின் ஆண்கள் மற்றும் பெண்கள் இரட்டையர் ஜோடி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று ம இகா விளையாட்டு பிரிவு தலைவர் ஆண்ட்ரூ டேவிட் தெரிவித்தார்.
இனி வரும் போட்டிகளிலும் மலேசியர்கள் வெற்றியை பெற கடுமையாக உழைக்க வேண்டும்.
உங்கள் வெற்றியால் நாடும் மக்களும் பெருமிதம் கொள்வோம் என்று அவர் சொன்னார்.

