தமிழ்மொழியில் புலமைப் பெற இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு கதை சொல்லுதல் பேச்சு போட்டியும் சிறப்பாக நடைபெற்றது.

ஈப்போ, மே.19: இடைநிலைப்பள்ளிகளில் பயிலும் இந்திய மாணவர்களுக்கு முன்னுரிமையும், முக்கியதுவமும் வழங்கப்பட வேண்டும். குறிப்பாக,தொடக்க தமிழ்ப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அதிக அளவில் செயல்நடவடிக்கைகள் ஏற்பாடுகள் செய்யப்படும். ஆனால், இடைநிலைப்பள்ளிகளில் பயிலும் இந்திய மாணவர்களுக்கு போதிய செயல் நடவடிக்கைகள் கிடையாது.

அதன் அடிப்படையில் நான்காவது ஆண்டாக வடகிந்தா மாவட்டதிலுள்ள இடைநிலைப்பள்ளியின் இந்திய மாணவர்களுக்கு பேச்சு போட்டி மற்றும் கதை சொல்லும் போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்று பேராக் தமிழ் சேவை இயக்கத்தின் தலைவரும், ஏற்பாட்டக்குழு தலைவருமான க.இரவிச்சந்திரன் கூறினார்.

தமிழ்ப்பள்ளிகளில் ஆரம்ப கல்வியை தொடங்கிய இந்திய மாணவர்கள் மலாய் மொழியில் பேச்சுப்போட்டியில் கலந்து தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். குறிப்பாக, அவர்கள் மலாய் மொழியில் புலமைப்பெற வேண்டும் என்ற உன்னத நோக்கித்திற்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது என்று அவர் கருத்துரைத்தார்.

அதுமட்டுமின்றி, ஆரம்ப கல்வியை தேசிய பள்ளிகளில் தொடங்கிய இந்திய மாணவர்கள் தமிழ்மொழியில் கதை சொல்லுதல் மற்றும் தமிழ் பேச்சுப் போட்டிக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டன. இதன் வாயிலாக தமிழ்மொழியை அவர்கள் நன்கு கற்றுணர்ந்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஏதுவாக அமையும் என்று அவர் சொன்னார்.

தமிழ்மொழியின் தொன்மை மற்றும் அதன் வரலாறு குறித்து அனைத்து இந்திய மாணவர்கள் உணருதல் அவசியம். குறிப்பாக, தமிழ்மொழியில் அதிகமான படைப்புகள் உள்ளன. அவற்றில் குறிப்பாக திருகுறளை சொல்லலாம். ஆகையால், தமிழ்மொழியை படிக்க தெரிந்தவர்கள் காலப்போக்கில் தமிழ்மொழி படைப்பான நூல்களை படித்து இன்புற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

நிறைவுவிழாவில், பேச்சுச் போட்டி மற்றும் கதை சொல்லும் போட்டி யில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், நற்சான்றிதழும் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles