

ஈப்போ, மே 19-
கடந்த 40 ஆண்டுகாலமாக அரசாங்கத்திற்கு சொந்தமான நிலத்தில வசித்து வந்த சுங்கை சட்டமன்றத் தொகுதியில் உள்ள கம்போங் செங்காய் மற்றும் குவால பீக்காம் கிராமங்களில் வசித்து வரும் மக்களுக்கு நிலப்பட்டா வழங்கப்பட்டது.
இதன் வழி கடந்த 40 ஆண்டுகால நிலப்பிரச்சனைக்கு தீர்வுக் காணப்பட்டதாக மாநில ஆட்சிக் குழு உறுப்பினரும் சுங்கை சட்டமன்ற உறுப்பினருமான அ. சிவநேசன. கூறினார்.
சுங்கை சட்டமன்றத் தொகுதியில் இந்த கிராம மக்களின் கடந்த் 40 ஆண்ட எதிர் நோக்கி வந்த நிலப்பிச்சனைகளுக்கு தீர்வுக்காணப்படுள்ளது என்றார்.
சுங்கை சட்டமன்றத் தொகுதில் கடந்த 50 ஆண்டுகாலமாக செங்காய் தோட்டத்தில் வசித்து வந்துள்ளனர்.
பின்னர் அந்த தோட்டம் விற்க்கப்பட்டதால் அங்குள்ள மக்களை தோட்டத்தில் இருந்த வெளியேறி அருகில் உள்ள பொதுப் பணி இலாக்காவிற்கு சொந்தமான நிலத்தில் குடியேறினர்.
கம்போங் செங்காய் என்று பெயரிடப்பட்ட அந்த நிலத்தில் வசித்து வந்த 32 குடும்பங்களுக்கு நிலபட்டா கிடைக்க மேற்கொண்ட முயற்சிக்கு இன்று பலன் கிடைத்துள்ளது என்றார்
இதே போன்று இந்த தொகுதியில் தெலுக் இந்தான் சாலையில் உள்ள கம்போங் பாரு , குவால பீக்காம் எனும் கிராமத்தில் வசித்து வரும் 52 குடும்பங்களின் நிலப் பிரச்சனைக்கு தீர்வுக்காணப்பட்டுள்ளது என்ற தகவலையும் கூறினார்..
நேற்றிரவு பீடோர் நகரில் 9 லட்சம் ரிங்கிட் செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய மண்டபத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலத்துக்கொண்டப் பின்னர் சிவநேசன் , கம்போங் செங்காய் கிராம் மற்றும் குவால பீக்காம் கிராம மக்களுக்கு நிலப்பட்டாக்களை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது
பின்னர் செய்தியளர்களிடம் பேசியபோது, சுங்கை சட்டமன்றத் தொகுதியில் 100 விழுக்காடு நிலப் பிரச்சனைகளுக்கு தீர்வுக்காணப்பட்டுள்ளது என்ற தகவலையும் தெரிவித்தார்.
பீடோர் நகரில் திறக்கபட்டுள்ள இந்த மண்டபம் சகல வசதிகள் கொண்ட நவீன வசதிகளுடன் செயல் படத் தொடங்கியுள்ளது.
இந்த மண்டபத்திற்கு டேவான் முகிபா என்ற பெயர் சூட்டபட்டுள்ளது.இந்த தொகுதியில் மக்களை அனைவரும் தங்களின் தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். அதனை கண்காணிக்கும் பொறுப்பை ஊராட்சி மன்றம் ஏற்றுள்ளது என்றார்.
இந்த நிகழ்வில் சுங்கை சட்டமன்றத் தொகுதியில் உள்ள ஆலயங்கள மற்றும் அரசு சார்பற்ற இயக்கங்களுக்கும் அரசு மாணியத்தை சிவநேசன் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.