
கோலாலம்பூர் மே 20-
மலேசிய திருநாட்டில் உள்ள இந்தியக் கலைஞர்கள் ஒரு குடையின் கீழ் இணைய வேண்டும் என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் கேட்டுக் கொண்டுள்ளார்.
மலேசிய இந்தியக் கலைஞர்கள் அறவாரியமான யாசி, துன் சாமிவேலு தலைமையில் தோற்றுவிக்கப்பட்டது. தற்போது இந்த அவ்வறவாரியத்தின் கீழ் யாசி விருதளிப்பு விழா நடத்தப்படவுள்ளது.
இவ்விருதளிப்பு விழா வரும் மே 31ஆம் தேதி செந்தூல் எச்ஜிஎச் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது என்று அவர் கூறினார்.
நாட்டில் புகழ்பெற்ற கலைஞர் டார்க்கி அவர்களுக்கு நேற்று யாசி அறவாரியத்தின் சார்பில் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.