
* விபத்தில் இறந்த அரசு அலுவலரின் குடும்பத்தில் திருமண வயதை எட்டியுள்ள மகளின் திருமண செலவுகளுக்காக மகள் ஒருவருக்கு தலா ரூ.5 லட்சம் வீதம், இரு மகள்களுக்கு ரூ. 10 லட்சம் வரை நிதியுதவி
* விபத்து காரணமாக இறந்த அரசு அலுவலரின் குடும்பத்தில் பள்ளிக்கல்வியை நிறைவு செய்து கல்லூரியில் உயர்கல்வி பயிலும் மகளின் உயர்கல்விக்காக உதவித்தொகையாக ரூ.10 லட்சம்.
சென்னை: அரசு ஊழியர்களுக்கு தனிநபர் விபத்து காப்பீடு தொகை ரூ.1 கோடியை வங்கிகள் மூலம் கட்டணமின்றி வழங்குவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அரசு ஊழியர்களின் நலன் கருதி, இவர்களுக்கும், அரசு ஊழியர் குடும்பத்தினருக்கும் கட்டணமில்லா காப்பீடு வழங்க ஏற்பாடு செய்யப்படும் என தமிழக அரசு அறிவிப்பு செய்தது. அரசு ஊழியர்கள் ஆயுள் காப்பீடு மற்றும் தனிநபர் விபத்துக் காப்பீடு போன்றவற்றிற்கு பெரும் தொகையைச் செலவழிப்பதைத் தவிர்த்து காப்பீடுகளை கட்டணமின்றிப் பெறும் வகையில் முன்னோடி வங்கிகளிடம் தமிழக அரசே பேச்சுவார்த்தை நடத்தியது. இதன் பயனாக பல சலுகைகளை அரசு பணியாளர்களுக்கு வழங்க வங்கிகள் முன்வந்துள்ளன.

