
ஈரோடு தம்பதி கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்த தமிழக காவல் துறைக்கு அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், “ஈரோடு மாவட்டம் சிவகிரியில், கடந்த ஒன்றாம் தேதி அன்று, தனியாக வசித்து வந்த ஐயா ராமசாமி கவுண்டர் மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் விரைந்து செயல்பட்டு, குற்றவாளிகளைக் கைது செய்துள்ள தமிழக காவல்துறைக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

