
ஜொகூர் பாரு, மே 23-
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற
கெஅடிலான் கட்சியின் தேசிய துணை தலைவர் தேர்தலில் நூருல் இஸா மகத்தான வெற்றி பெற்றார்.
கெஅடிலான் துணைத் தலைவர் பதவிக்கு ரபிசி ரம்லிக்கும் நூருல் இசா அன்வாருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
இதில் நூருல் இசா அன்வார் 9,803 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.
இதன் மூலம் கெஅடிலான் கட்சியின் துணைத் தலைவராக நூருல் இசா பேராளர்களால் தேர்வு செய்யப்பட்டார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட ரபிசி ரம்லி 3866 வாக்குகளை பெற்று தோல்வி கண்டார்.

