

சுங்கை பூலோ, மே 24-
கோலாலம்பூர் மலேசிய இந்தியர் கால்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று சுங்கை பூலோ மெல்வூட் கிளப் திடலில் விலாயா மாநில தமிழ்ப் பள்ளிகள் இடையிலான கால்பந்து போட்டி மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.
விலாயா மாநிலத்தில் உள்ள 15 தமிழ்ப் பள்ளிகள் இந்த போட்டியில் பங்கேற்றன.
புக்கிட் ஜாலில் மற்றும் சிகாம்பூட் தமிழ்ப் பள்ளிகள் சார்பில் இரண்டு குழுக்கள் பங்கேற்றன.
மாணவர்கள் பிரிவில் 16 குழுக்களும் மாணவிகள் பிரிவில் 9 குழுக்களும் போட்டியில் கலந்து கொண்டன.
கோலாலம்பூர் இந்தியர் கால்பந்து சங்கத்தின் தலைவர் டத்தோ எஸ். வீரமணி தலைமையில் நடைபெற்ற இந்த போட்டியை ம இகா தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மீபா எனப்படும் மலேசிய இந்தியர் கால்பந்து சங்கத்தின் துணைத் தலைவர் ஏஎஸ்பி இராஜன் ,
விலாயா மாநில தமிழ்ப் பள்ளி தலைமை ஆசிரியர் மன்றத்தின் தலைவர் சந்திரசேகரன், சுரேஸ் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
விலாயா மாநில தமிழ்ப் பள்ளிகள் கால்பந்து போட்டியில் மாணவர்கள் பிரிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் இரண்டு குழுக்களும் மாணவிகள் பிரிவில் முதல் இடத்தை பிடிக்கும் குழுவும் மீபா நடத்தும் தேசிய தமிழ்ப் பள்ளிகள் இடையிலான கால்பந்து போட்டியில் பங்கேற்கும் என்று டத்தோ வீரமணி தெரிவித்தார்.
விலாயா மாநில தமிழ்ப் பள்ளிகள் இடையிலான கால்பந்து போட்டி வெற்றி பெற 10,000 வெள்ளி மானியம் வழங்கி பேருதவி புரிந்த டத்தோஸ்ரீ சரவணன் அவர்களுக்கு டத்தோ வீரமணி நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

