தமிழ்ப்பள்ளி மாணவர்களின் விளையாட்டு மேம்பாட்டிற்கு மீபாவின் பணி பாராட்டுக்குரியது! டத்தோஸ்ரீ சரவணன் புகழாரம்

சுங்கை பூலோ, மே 24-
நாட்டில் உள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்களின் விளையாட்டு மேம்பாட்டிற்கு மீபா எனப்படும் மலேசிய இந்தியர் கால்பந்து சங்கத்தின் பணி மிகவும் பாராட்டுக்குரியது என்று ம இகா தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் தெரிவித்தார்.

இந்தியர்களுக்காக மீபா பல விளையாட்டு போட்டிகளை நடத்தி வருகிறது.

அதில் குறிப்பாக தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் வகையில் கால்பந்து போட்டியை வெற்றிகரமாக நடத்தி வருகிறது என்று அவர் சொன்னார்.

முன்பு ஒவ்வொரு வீடமைப்பு பகுதியிலும் திடல்கள் இருந்தன. ஆனால் இப்போது ஏராளமான திடல்கள் இல்லை.

இருப்பினும் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் விளையாட்டு துறையில் பின் தங்கி விடாமல் இருக்க மீபா மேற்கொண்டு வரும் முயற்சிகள் மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

மீபா மறுபிறவி எடுத்ததை போல் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு இப்போது பல போட்டிகளை நடத்தி வருகிறது.
மீபாவின் பணி தொடர வேண்டும் என்று
விலாயா மாநில தமிழ்ப் பள்ளிகள் இடையிலான கால்பந்து போட்டியை இன்று சுங்கை பூலோ மெல்வூட் கிளப் திடலில் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றிய போது டத்தோஸ்ரீ எம் சரவணன் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles