கெஅடிலான் உச்சமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்ற அமைச்சர் பாமி பட்சில்!

ஜொகூர் பாரு மே 24-
நேற்று நடைபெற்ற கெஅடிலான் கட்சியின் தேசிய உச்சமன்ற தேர்தலில் தகவல் தொடர்பு துறை அமைச்சர் பாமி பட்சில் அமோக வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

20 உச்சமன்ற பதவிகளுக்கு கடுமையான போட்டி நிலவியது. இருப்பினும் அமைச்சர் பாமி பட்சில் 4,811 வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்தார்.

இளைஞர் விளையாட்டு துறை துணை அமைச்சர் அடாம் அடில் 4,798 வாக்குகள், சான் மிங் காய் 4,753 வாக்குகள் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் 4,699 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர்.

டாக்டர் மஸ்லி மாலிக், கோ சுன் ஏக், நுரின் ஐனா, எலிசபெத் ஹேங், சூல்கிப்லி,சித்தி ஐசா, அல்டிமெட், அக்மால் நசீர், அமிடி, லீ சியான் செங், அசாம் காராப், சைட் இப்ராஹிம், பத்து ஊபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன், சிம் ச்சுன் சாங். மற்றும் சிவமலர் ஆகியோர் வெற்றி பெற்றவர்களில் இடம் பெறுவார்கள்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles